Home One Line P2 சைக்கோ: படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சியை வெளியிட்ட படக்குழு!

சைக்கோ: படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சியை வெளியிட்ட படக்குழு!

1037
0
SHARE
Ad

சென்னைஇயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படமான ‘சைக்கோ‘ திரைப்படம் இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) வெளியாகி உள்ள நிலையில், அத்திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டு இரசிகர்களின் எதிர்ப்பார்ப்பைத் தூண்டி உள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பெண் ஒருவரின் தாயும், தந்தையும் காண வரும் போது, ‘கால்ல மச்சம் இருக்கானு மட்டும் பாத்துக்குறேன்’ என்று அந்த தாய் கூறி, அப்பெண்ணின் காலைத் தூக்கிப் பார்க்கிறார்.

காலில் மச்சத்தைக் கண்டதும், ஒன்றுமே பேசாமல் அங்கிருந்து எழுந்து நடந்து சென்று மண்டியிட்டு ‘ஏய் கடவுளே’ என்று கதறும் காட்சியுடன் அக்காட்சி முடிகிறது.

#TamilSchoolmychoice

இந்த காணொளி இரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டி வருவது குறிப்பிடத்தக்கது.

அண்மையில், இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியாகி பரவலாகப் பகிரப்பட்டது.

மிஷ்கின் இயக்கத்தில்இந்தப் படத்தில் உதயநிதிக்கு இணையாக அதிதி ராவ் ஹைதரிநித்யா மேனன் என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

மேலும்இயக்குநர் ராம் இத்திரைப்படத்தில் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதுஇசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும், இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் அக்காட்சியைக் காணலாம்: