Home One Line P2 உதயநிதியின் மாறுபட்ட நடிப்பில் ‘சைக்கோ’ திரைப்பட முன்னோட்டம் வெளியீடு!

உதயநிதியின் மாறுபட்ட நடிப்பில் ‘சைக்கோ’ திரைப்பட முன்னோட்டம் வெளியீடு!

1089
0
SHARE
Ad

சென்னை: இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படமான ‘சைக்கோ‘ திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியாகி பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

மிஷ்கின் இயக்கத்தில்நடிகர் விஷாலின் ‘துப்பறிவாளன்‘ படம் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது. அதற்கு பிறகு உருவாகும் இந்தப் படத்தில் உதயநிதிக்கு இணையாக அதிதி ராவ் ஹைதரிநித்யா மேனன் என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

மேலும்இயக்குநர் ராம் இத்திரைப்படத்தில் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இப்படத்தற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

#TamilSchoolmychoice

இப்படம் வருகிற ஜனவரி 24-ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இத்திரைப்படத்தின் முன்னோட்டத்தைக் காணலாம்: