Home நாடு 1எம்டிபி குற்றச்சாட்டு ஜோடிக்கப்பட்டது – முன்னாள் செய்தியாளர் வாக்குமூலம்

1எம்டிபி குற்றச்சாட்டு ஜோடிக்கப்பட்டது – முன்னாள் செய்தியாளர் வாக்குமூலம்

539
0
SHARE
Ad
1MDB

கோலாலம்பூர், ஜூலை 16 – 1எம்டிபி விவகாரத்தில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என ‘சரவாக் ரிப்போர்ட்’ -ன் முன்னாள் செய்தியாளர் லெஸ்தெர் மெலான்யி தெரிவித்துள்ளார்.

1எம்டிபி குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமாக லெஸ்டெர் பேசுவது போலான காணொளி ஒன்று நேற்று நட்பு ஊடகங்களில் வெளியானது.

அந்தக் காணொளியில் கூறியிருப்பதை, தேசிய முன்னணியின் தகவல் தொடர்பு இயக்குநர் அப்துல் ரஹ்மான் டாலானும் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், மேற்கோள் காட்டினார்.

#TamilSchoolmychoice

அந்தக் காணொளியில், தான் ‘சரவாக் ரிப்போர்ட்’ பத்திரிக்கையின் நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றியதாகவும், அப்பத்திரிக்கையின் தலைமை நிர்வாக ஆசிரியர் கிளேர் ரிகேஸ்டில் பிரவுன் நடத்திய இணையத்தளத்தில், 1எம்டிபி பற்றிய குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டதற்கு தானே பொறுப்பு என்றும் லெஸ்தெர் கூறியுள்ளார்.

மேலும் லெஸ்தெர் கூறியிருப்பதாவது:-

“இந்த வருடம் ஜனவரி மாதம், 1எம்டிபி திட்டம் பற்றி கிளேர் என்னிடம் பேசினார். அன்வார் இப்ராகிமிற்காக இந்த முறை நமக்கு மிக முக்கியமான பணி ஒன்று இருப்பதாகத் தெரிவித்தார்.”

“ஜசெக வழக்கறிஞர் டோனி புவா மற்றும் பிகேஆர் உதவித்தலைவர் ரஃபிசி ரம்லி ஆகியோர் என்ன கேட்கிறார்களோ அதை நான் செய்து கொடுக்க வேண்டும் என்று கிளேர் என்னிடம் தெரிவித்தார்.” என்றும் அந்தக் காணொளியில் லெஸ்தெர் தெரிவித்துள்ளார்.

நேற்று அந்தக் காணொளி தேசிய முன்னணியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம் மற்றும் மற்ற நட்பு ஊடகங்களில் வெளியிடப்பட்டது.

எனினும், கிளேர் இதை மறுக்கிறார். லெஸ்தெர் ‘சரவாக் ரிப்போர்ட்’ பத்திரிக்கையில் பணியாற்றவே இல்லை என்றும், கடந்த 2011-ம் ஆண்டு, ‘ரேடியோ ஃபிரீ சரவாக்’ (ஆர்எப்எஸ்) என்ற நிறுவனத்தில், சில மாதங்களுக்கு மட்டுமே தற்காலிகப் பணியில் அமர்த்தப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.