Home இந்தியா பிரதமர் மோடி நாளை காஷ்மீர் பயணம்: வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு!

பிரதமர் மோடி நாளை காஷ்மீர் பயணம்: வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு!

520
0
SHARE
Ad

modi00110-600ஜம்மு, ஜூலை 16- மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியின் மாமனார் கிரிதர் லால் டோக்ராவின் 100-ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி நாளை ஜம்முவில் உள்ள ஜெனரல் சோர்வார் சிங் ஆடிட்டோரியத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகப் பிதரமர் மோடி,  நாளை காஷ்மீர் செல்கிறார்.

இதனால் காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத் துணை ராணுவப் படையினரும் இணைந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.

#TamilSchoolmychoice

மிகவும் பதற்றம் நிறைந்த சோதனைச்சாவடிப் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழா நடைபெறும் இடத்தைக் காவல்துறையினர் தங்கள் வசம் எடுத்துக்கொண்டுள்ளனர்.