Home நாடு 1எம்டிபி நிதி மீண்டும் பெறப்படும்!- லிம் குவான் எங்

1எம்டிபி நிதி மீண்டும் பெறப்படும்!- லிம் குவான் எங்

1882
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கையாடப்பட்ட 1எம்டிபி நிதியை விரைவில் மலேசியா பெறப்போவதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

பில்லியன் கணக்கில் இல்லையென்றாலும், முதல் கட்டமாக இப்பணம் நாட்டிற்கே திரும்புவது நன்மையான செய்தி என அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து மேலும், இரண்டாம் கட்டமாக 1எம்டிபி பணம் பெறப்படும் எனவும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

ஆயினும், இப்பணமானது எங்கிருந்து, யாரிடமிருந்து வரப்போகிறது என்ற விவரங்களை அமைச்சர் வெளியிட மறுத்து விட்டார்.

1எம்டிபி நிதியில் இருந்து நூற்றுக்கணக்கான மில்லியன் பணத்தைப் பெற்ற எதிர் கட்சியினர் அந்த பணத்தை திரும்பச் செலுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த அரசியல் கட்சிகளிடமிருந்து பணத்தைப் பெறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும், அவற்றில் நீதிமன்ற வழக்குகளும் அடங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.