Home Video ஒட்டகத்தை மையமாகக் கொண்ட முதல் தமிழ் திரைப்படம்!

ஒட்டகத்தை மையமாகக் கொண்ட முதல் தமிழ் திரைப்படம்!

1086
0
SHARE
Ad

சென்னை: ஒட்டகத்தை மையப்படுத்தி பக்ரீத்’ எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியானது. இயக்குனர் ஜகதீசன் சுபு இயக்கத்தில் நடிகர் விக்ராந்த், வசுந்தரா காஷ்யப், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் பலரது நடிப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

ஒட்டகத்தை அதனுடைய இருப்பிடத்தை விட்டு வேறு இடத்திற்கு அழைத்து வந்து வளர்க்க கதாநாயகன், விக்ராந்த் சிரமப்படும் காட்சிகள் இரசிகர்களின் மனதை உருக்கும் என திரைப்படக் குழு குறிப்பிட்டுள்ளது.

மேலும், அந்த ஒட்டகத்தை ராஜஸ்தானுக்கு திரும்ப கொண்டு செல்ல அவர் படும் அவதிகளை படம் பேசியிருப்பதாக இயக்குனர் குறிப்பிட்டுள்ளார். ‘பக்ரீத்’ படத்தின் முன்னோட்டக் காணொளியை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் காணலாம்:

#TamilSchoolmychoice