Home Video வெண்ணிலா கபடி குழு 2 ஜூலை 12-இல் வெளியீடு!

வெண்ணிலா கபடி குழு 2 ஜூலை 12-இல் வெளியீடு!

1132
0
SHARE
Ad

சென்னை: கடந்த 2009-ஆம் ஆண்டு இயக்குனர் சுசிந்திரனின் இயக்கத்தில் வெளிவந்து இரசிகர்களின் பெரும் வரவேற்றைப் பெற்ற வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 12) திரைக்காண்கிறது.

இயக்குனர் செல்வ சேகரன் இயக்கத்தில் விக்ராந்த், அர்த்தனா பீனு, பசுபதி, சூரி, கிஷோர், அப்புக்குட்டி, கஞ்சா கருப்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் முதற் பாகத்தை தழுவியதல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு செல்வகணேஷ் இசையமைத்துள்ளார்.

கபடி போட்டியை மையப்படுத்திய இப்படத்தின் முன்னோட்டக் கணொளி சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதில், கபடி விளையாடுவதற்கு தமிழன் என்ற ஒரு தகுதி போதாதா? செத்தாலும் பரவாயில்லை, ஆனால், ஜெயிக்கணும் என்ற உரையாடல்கள் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

#TamilSchoolmychoice

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: