Home இந்தியா மாநிலங்களவை உறுப்பினர்களாக திமுக, அதிமுக சார்பாக போட்டியிட்ட உறுப்பினர்கள் தேர்வு!

மாநிலங்களவை உறுப்பினர்களாக திமுக, அதிமுக சார்பாக போட்டியிட்ட உறுப்பினர்கள் தேர்வு!

848
0
SHARE
Ad

சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அதிமுக, திமுக சார்பில் போட்டியிட்ட ஆறு வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

வருகிற 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக, திமுக சார்பில் தலா மூன்று உறுப்பினர்கள் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து அதிமுக சார்பில் முகம்மது ஜான், சந்திரசேகரன் மற்றும் அதிமுக கூட்டணியில் பாமகவின் அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர். திமுக சார்பில் சண்முகம், வில்சன் மற்றும் திமுக கூட்டணியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் போட்டியிட்டனர்

#TamilSchoolmychoice

ஆறு உறுப்பினர்களுக்கான பதவிக்கு சரியாக ஆறு பேர் போட்டியிட்டதைத் தொடர்ந்து வேட்புமனுத் தாக்கல் செய்த அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆறு பேருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது