Home கலை உலகம் ஆதித்யா வர்மா: ‘வர்மா’ படத்திற்கு புதிய தலைப்பு!

ஆதித்யா வர்மா: ‘வர்மா’ படத்திற்கு புதிய தலைப்பு!

799
0
SHARE
Ad

சென்னை: மீண்டும் தயாரிக்கப்படும்வர்மாதிரைப்படத்திற்கு புதிய தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு, ‘ஆதித்யா வர்மா’ என பெயரிடப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக த்ருவ்விக்ரம் நடிக்க இருக்கிறார். மேலும், புதிய படக்குழுவும் இத்திரைப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவில், கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிக் கண்ட திரைப்படம்அர்ஜுன் ரெட்டி’. விஜய் தேவரகொண்டா இத்திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் தமிழகத்திலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது

#TamilSchoolmychoice

இந்த படத்தைத் தயாரிப்பதில் ஏற்பட்ட விவகாரத்தினால், நடிகர் விக்ரம் மற்றும் இயக்குனர் பாலாவுக்கும் இடையில் உரசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன

தற்போது இந்தப்படத்தை இயக்குனர் கிரிசாயா என்பவர் இயக்கவுள்ளார்மேலும், கதாநாயகிகளாக பனிதா சந்து மற்றும் பிரியா ஆனந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய விருது பெற்ற ரவி கே. சந்திரன் இப்படத்திற்கான ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.