Home நாடு சாஹிட் மீது மேலும் ஒரு நம்பிக்கை மோசடி குற்றம் சுமத்தப்பட்டது!

சாஹிட் மீது மேலும் ஒரு நம்பிக்கை மோசடி குற்றம் சுமத்தப்பட்டது!

709
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் துணைப் பிரதமர் டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி மீது மேலும் ஒரு நம்பிக்கை மோசடி குற்றத்திற்காக, இன்று புதன்கிழமை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

அகால் புடி நிறுவனத்திற்குச் சொந்தமான 260,000 ரிங்கிட் நிதிசம்பந்தமாக அவர் மீது இக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

ஆயினும், நிதிபதி அசுரா அல்வி முன்னிலையில் இக்குற்றத்தினை சாஹிட் மறுத்தார்.

#TamilSchoolmychoice

இதுவரையிலும், அவர் மீது ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக 46 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மலேசியாவில் அதிரகாரப் பதவியில் இருந்தவர்களில், அதிகமான குற்றம் சாட்டப்பட்ட நபராக சாஹிட் திகழ்கிறார்.

குற்றவியல் பிரிவு 409 கீழ் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், 20 வருடங்களுக்கும் குறைவான சிறைத் தண்டனை, அபராதம் மற்றும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.