Home நாடு இஸ்லாமியத்திற்காக அம்னோ, பெர்சாத்துவுடன் இணைந்து செயல்படுவோம்!- பாஸ்

இஸ்லாமியத்திற்காக அம்னோ, பெர்சாத்துவுடன் இணைந்து செயல்படுவோம்!- பாஸ்

647
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா: ஜசெகாவின் செயல்திட்டத்தை முறியடிப்பதற்கு பாஸ் கட்சி, அம்னோ மற்றும் பெர்சாத்து கட்சிகளுடன் இணைந்து செயல்படும் என பாஸ் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் நிக் அப்டு நிக் அசிஸ் தெரிவித்தார். இஸ்லாமிய இறையாண்மைக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் ஏற்படாது இருப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

முன்னதாக, கேமரன் மலையில் நம்பிக்கைக் கூட்டணியைப் பிரதிநிதித்து, ஜசெக கட்சி வேட்பாளர் போட்டியில் இறங்கியதற்காகத்தான் அக்கூட்டணி தோல்வியுற்றது என பிரதமர் மகாதீர் குறிப்பிட்டிருந்தார்.

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தில் பிரதமர் மகாதீருக்கு எதிராக சில தரப்பினர்கள் செயல்பட்டு வருவதாகவும், அவரை பிரதமர் பதவியிலிருந்து அகற்ற இரு கட்சிகள் செயல்பட்டு வருவதாகவும் பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் குறிப்பிடிருந்தார். ஆயினும், அவ்விரு கட்சிகள் எவை என்பதை அவர் குறிப்பிடவில்லை.