Home நாடு பிஎஸ்எச்: பிரதமரின் தூண்டுதலால், நிறுத்தப்பட்ட உதவித்தொகை தொடரப்படும்!

பிஎஸ்எச்: பிரதமரின் தூண்டுதலால், நிறுத்தப்பட்ட உதவித்தொகை தொடரப்படும்!

703
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமரின் தூண்டுதலால் குறைந்த வருமானத்தைப் பெறும் (பி40) திருமணமாகாத தனித்து வாழ்வோருக்கும், மார்ச் மாதம் 100 ரிங்கிட் வழங்கப்படும் என நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார். முன்னதாக, திருமணமாகாதவர்களுக்கு இத்தொகை வழங்கப்பட மாட்டாது என நம்பிக்கைக் கூட்டணி அரசு அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, கருத்துரைத்த, முன்னாள் அம்னோ கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் கைரி ஜமாலுடின், தேசிய முன்னணி அரசாங்கம், இதற்கு முன்னர் 450 ரிங்கிட் உதவித்தொகையை திருமணமாகாதவர்களுக்கு வழங்கியதாகவும், அதனை மீண்டும் நடப்பு அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், நடப்பு அரசாங்கம் இம்மாதிரியான திடீர் அறிவிப்புகளை செய்வது, அவர்களின் நிலையில் தடுமாற்றம் ஏற்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் மக்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.