கிழக்கு ஆசியா, ஆசியா பசிபிக் மற்றும் ஆஸ்திரேலிய பகுதிகளில் உள்ள 13 நாடுகளிலிருந்து, சுமார் 300-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற போட்டியை எதிர்கொண்டன.
2019-ஆம் ஆண்டுக்கான உலகபல்கலைக்கழகதரவரிசைப் பட்டியலில் பயன்படுத்தப்பட்ட அதே அளவிலான அம்சங்களைக் கணக்கில் கொண்டு இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஆசியா பசிபிக் பிராந்தியத்திற்கான சிறந்த பல்கலைக்கழகமாக சீனாவின் சிங்ஹுவா பல்கலைக்கழகம் திகழ்கிறது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தில் இடம்பெற்றுள்ளது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது .