கமல்ஹாசன், தீவிரமாக அரசியல் பணிகளில் ஈடுபட்டு வரும் வேளையில், அவரை நோக்கி இம்மாதிரியான வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
லைகா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இது குறித்துப் பேசிய போது, கடந்த ஒரு வாரமாக சென்னை அரசு மருத்துவமனை அருகே உள்ள மெமோரியல் ஹாலில் முக்கியக் காட்சிகளை படமாக்கிவிட்டு , அடுத்தக் கட்டமாக, பல இடங்களில் அரங்குகள் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.