Home உலகம் தீவிரவாதி ஹபிஸ் சயித்தின் ஜமாத் உத் தவா அமைப்புக்கு தடை!- இம்ரான் கான்

தீவிரவாதி ஹபிஸ் சயித்தின் ஜமாத் உத் தவா அமைப்புக்கு தடை!- இம்ரான் கான்

1047
0
SHARE
Ad

இஸ்லாமாபாத்: கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பையில் தாக்குதலை மேற்கொண்ட ஹபிஸ் சயித் தலைமையிலான ஜமாத் உத் தவா தீவிரவாத அமைப்புக்கும், பலாஹ் இ இன்சானியத் அமைப்புக்கும் தடை விதித்து பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்டக் கூட்டம் ஒன்றில் பிரதமர் இம்ரான் கான் இம்முடிவினை அறிவித்தார்.

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு அனைத்துலக அளவில் பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து, இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிரது. ஆயினும், புல்வாமா தாக்குதலுக்கு முக்கியக் காரணமாக இருப்பதாகக் கூறப்படும் ஜய்ஷ் இ முகமட் தீவிரவாத அமைப்புக்கு தடைவிதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

கூடிய விரைவில் புல்வாமா தாக்குதலுக்குக் காரணமான ஜய்ஷ் இ முகமட் தீவிரவாத அமைப்புக்கும் தடை விதித்து பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு எதிரான தமது உண்மையான தோற்றத்தை வெளிப்படுத்துமா எனும் கேள்விகள் எழுந்துள்ளன.