அமைதியான சூழலில் இந்த விவகாரத்தைத் தீர்க்க பாகிஸ்தான் முனைப்புக் காட்டுவதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இது விவகாரமாகப் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தீவிரவாதத்துக்கு எதிராக உலகமே எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார். தகுந்த நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் எனவும், பொறுமைக் காக்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனை அடுத்து, பிரதமர் இம்ரான் கானின் அலுவலகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், வாய்ப்புகள் வழங்கப்பட்டால், இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டறிந்து தகுந்த நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்கும் எனவும், அது குறித்த ஆதாரங்களை இந்தியா பாகிஸ்தானிடம் தர வேண்டுமென்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.