Home வணிகம்/தொழில் நுட்பம் மேக்சிஸ் 5-ஜி முன்னோட்ட சோதனைகளை மேற்கொள்கிறது

மேக்சிஸ் 5-ஜி முன்னோட்ட சோதனைகளை மேற்கொள்கிறது

1295
0
SHARE
Ad
கோலாலம்பூர் – அடுத்த கட்ட தொழில் நுட்பப் புரட்சியாகக் கருதப்படும் 5-ஜி அலைக்கற்றை அறிமுகம் அனைத்துத் தரப்புகளாகும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் வேளையில், அதற்கான முன்னோட்ட சோதனைகளை மேக்சிஸ் தொலைத் தொடர்பு நிறுவனம் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றது.
இந்த வாரத் தொடக்கத்தில் நடத்தப்பட்ட முன்னோட்ட சோதனைகளில் பதிவிறக்கங்களில் ஒரு வினாடிக்கு 3 கிகாபைட் (three gigabits per second – Gbps) என்ற அளவிலான விரைவை அந்த சோதனைகள் பதிவு செய்ததாக மேக்சிஸ் அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளது.

கடந்த 6 மாத காலமாக சைபர் ஜெயா வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை முயற்சிகளில் இணையம் மற்றும் கையடக்கக் கருவிகளின் தொழில் நுட்ப ஆற்றலும் விரைவும் மேலும் பன்மடங்கு அதிகரிக்கும் என்பதைத் தாங்கள் அறிந்துள்ளதாகவும், சோதனை நடவடிக்கைகளின் முடிவுகள் தங்களுக்கு உற்சாகம் ஊட்டுவதாகவும், மேக்சிஸ் அறிக்கை மேலும் தெரிவித்தது.

மலேசியாவில் முதன் முதலாக 4-ஜி சேவைகளை அறிமுகப்படுத்திய மேக்சிஸ் அதே போன்று, 5-ஜியை அறிமுகப்படுத்தும் முதல் நிறுவனமாகத் திகழும் என்றும் அந்த அறிக்கை தொடர்ந்து குறிப்பிட்டது.

மலேசியாவில் 5-ஜி தொழில் நுட்பத்தை அனுபவிக்கும் முதல் நகர்களாக புத்ரா ஜெயாவும், சைபர் ஜெயாவும் திகழும்.

#TamilSchoolmychoice

5-ஜி தொழில்நுட்பம் முழுமையான அளவில் பயன்பாட்டுக்கு வரும்போது, தற்போதுள்ள 4-ஜி தொழில் நுட்பத்தை விட 10 மடங்கு விரைவாக சேவைகள் கிடைக்கும் என்பதோடு, 360 பாகை சுற்றளவில் பார்வையிடும் வசதியும் மக்களுக்குக்
கிடைக்கும்.