Home நாடு ஆசியான் நாடுகளின் சக்திவாய்ந்த கடப்பிதழ் – மலேசியாவுக்கு 2-வது இடம்

ஆசியான் நாடுகளின் சக்திவாய்ந்த கடப்பிதழ் – மலேசியாவுக்கு 2-வது இடம்

865
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஆசியான் நாடுகளில் அதிக சக்தி வாய்ந்த அனைத்துலகக் கடப்பிதழ்களின் (பாஸ்போர்ட்) வரிசையில் மலேசியாவுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. வழக்கம்போல் சிங்கப்பூர் தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

passport rank

ஆசியான் நாடுகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் மலேசியக் கடப்பிதழ் அனைத்துலக அளவில் 8-வது இடத்தைப் பிடித்துள்ளது.

சிங்கப்பூர் அனைத்துலக அளவில் 3 இடத்தைக் கைப்பற்றியிருக்கிறது.

#TamilSchoolmychoice

மலேசியக் கடப்பிதழைக் கொண்டு உலகின் 159 நாடுகளுக்கு விசா என்ற குடிநுழைவு அனுமதி இல்லாமல் பயணம் செய்யலாம்.

ஆசியான் நாடுகளில் மியன்மாருக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது. அனைத்துலக அளவிலும் சக்தி வாய்ந்த கடப்பிதழ்களின் வரிசையில் மியன்மாருக்கு 78-வது இடம் கிடைத்திருக்கிறது.