அதன்படி, ஐக்கிய அரபு சிற்றரசு நாட்டின் கடப்பிதழைக் கொண்டு 179 நாடுகளுக்கு விசா இன்றியோ அல்லது நுழைந்ததும் வழங்கப்படும் உடனடி குடிநுழைவு அனுமதியைக் கொண்டோ பயணம் செய்ய முடியும். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஐக்கிய அரபு சிற்றரசு நாட்டின் கடப்பிதழ் முதல் நிலையைப் பிடித்திருக்கிறது.
இதற்கு அடுத்த நிலையில் ஜெர்மனி, பின்லாந்து, லக்சம்பெர்க், ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கடப்பிதழ்கள் திகழ்கின்றன. இந்த நாடுகளின் கடப்பிதழ்களைக் கொண்டு 172 நாடுகளுக்கு குடிநுழைவுத் தடையின்றி பயணம் செய்ய முடியும்.மூன்றாவது நிலையில் டென்மார்க், இத்தாலி, நெதர்லாந்து, ஆஸ்திரியா, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, ஜப்பான், தென் கொரியா, அயர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடப்பிதழ்கள் திகழ்கின்றன. இந்தக் கடப்பிதழ்களைக் கொண்டு 171 நாடுகளுக்குத் தடையின்றி பயணம் மேற்கொள்ள முடியும்.
இந்த வரிசையில் மலேசியாவின் கடப்பிதழ் 13-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஆசிய நாடுகளில் முறையே ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கின்றன. மலேசியாவுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது.