Home One Line P1 ஐக்கிய அரபு சிற்றரசில் இஸ்ரேல் தூதரகத்தை அமைத்தது

ஐக்கிய அரபு சிற்றரசில் இஸ்ரேல் தூதரகத்தை அமைத்தது

594
0
SHARE
Ad

ஜெருசேலம்: ஐக்கிய அரபு சிற்றரசில் தனது முதல் தூதரகத்தை திறந்து விட்டதாக இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு சிற்றரசு உடன் முழு அரசதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கான கடந்த ஆண்டு அமெரிக்காவின் முன்னிலையில் நடைபெற்ற உடன்படிக்கையைத் தொடர்ந்து இந்த செய்தி வெளியாகி உள்ளது.

இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம், தூதரகம் ஒரு தற்காலிக அலுவலகத்தில் இருக்கும் என்றும், அதே நேரத்தில் நிரந்தர இடம் ஏற்படுத்தப்படுவதாகக் கூறினார். மூத்த இஸ்ரேலிய அரசதந்திரி ஈட்டன் நஹே, தூதராக பணியாற்றுவார்.

#TamilSchoolmychoice

புதிய தூதரகத்தை திறப்பது இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு சிற்றரசுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்த அனுமதிக்கும் என்று வெளியுறவு அமைச்சர் காபி அஷ்கெனாசி தெரிவித்தார்.

செப்டம்பர் மாதத்தில் முறையாக உறவுகளை ஏற்படுத்தியதிலிருந்து, இரு நாடுகளும் ஏற்கனவே நேரடி விமான சேவைகள், ஏராளமான வர்த்தக பிரதிநிதிகளை பரிமாறிக்கொண்டன. அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் ஐக்கிய அரபு சிற்றரசுக்கு வருகை தந்துள்ளனர்.