Home One Line P2 பெஞ்சமின் நெத்தன்யாகு நாடாளுமன்றத்தில் போதுமான இடங்களைப் பெறவில்லை!

பெஞ்சமின் நெத்தன்யாகு நாடாளுமன்றத்தில் போதுமான இடங்களைப் பெறவில்லை!

604
0
SHARE
Ad

ஜெருசேலம்: இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு நாடாளுமன்றத்தில் நிலைத்திருக்க போதுமான இடங்களைப் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட முழுமையற்ற தேர்தல் முடிவுகளில் 59 இடங்களில் அவர் வெல்வதற்கான வாய்ப்புகளை வெளிப்படுத்துகிறது.

சுமார் 90 விழுக்காடு வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அரபு கட்சி அதிகார சமநிலையை வைத்திருக்க போதுமான இடங்களில் வெற்றி பெற்று வருகிறது.

#TamilSchoolmychoice

அரபு கட்சியான ராம், நெத்தன்யாகுவுடன், இயற்கைக்கு மாறாக, அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளை ஆதரிக்குமா அல்லது அவர் பதவியில் நீடிப்பதை எதிர்க்கும் முகாமின் ஆதரவளிக்குமா என்று இன்னும் அறிவிக்கவில்லை.

சமீபத்திய முடிவுகளின் அடிப்படையில், பதவியில் நிலைத்திருக்க நெத்தன்யாகு ராம் மற்றும் ஒரு சிறிய வலதுசாரி தேசியவாத கட்சியான யமினா ஆகியோரின் ஆதரவைப் பெற வேண்டும். ராமைப் போலவே, யமினாவின் தலைவரான நப்தாலி பென்னட், எந்தப் பக்கம் ஆதரவு வழங்குவார் என்று இன்னும் அறிவிக்கவில்லை.