Home One Line P1 கிளந்தான்: 11 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டதால் பள்ளி மூடப்பட்டது

கிளந்தான்: 11 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டதால் பள்ளி மூடப்பட்டது

552
0
SHARE
Ad

கோத்தா பாரு: கொவிட் -19 தொற்று காரணமாக 11 ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவர் பாதிக்கப்பட்டுள்ளதால் கிளந்தானில், ஒரு பள்ளி இன்று முதல் மூடப்பட்டது.

செரி கெதெரே தேசியப் பள்ளியில் இந்த தொற்று பரவியதாகக் கூறப்படுகிறது. திருமண விழாவில் கலந்து கொண்ட ஆசிரியரால் மற்ற ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இந்த தொற்று ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

“இதன் விளைவாக, பள்ளி இன்று மூடப்படும். மேலும் 24 ஆசிரியர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் நேற்று பள்ளியில் முதன்முதலில் சம்பவம் கண்டறியப்பட்டது. மாநில கல்வித் துறை (ஜேபிஎன்) மற்றும் மாவட்ட சுகாதார மையத்தின் அறிவுறுத்தல்களைப் பெற்ற பின்னர் பள்ளி மூடப்பட்டது,” என்று பெயர் குறிப்பிட மறுத்த ஒரு வட்டாரம் தெரிவித்ததாக மலேசியாகினி கூறியது.

#TamilSchoolmychoice

எவ்வாறாயினும், இந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப்ரல் 3 வரை இடைக்கால விடுமுறைக்கு முன்னதாக, இன்றும் நாளையும் வீட்டு கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்முறை எப்போதும் போல நடக்கும்.

இதற்கிடையில், மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் ஜெய்னி உசின் தொடர்பு கொண்டபோது சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.