கோலாலம்பூர்: அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அம்னோ கட்சித் தலைவர்களில் தேசிய கூட்டணியில் தற்காப்பு அமைச்சராக இருக்கிறார். ஆயினும், அம்னோவின் முடிவு குறித்து இதுவரையிலும் அவர் எந்தவொரு கருத்தையும் வெளியிட்டதில்லை.
முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் முகமட் கிர் தொயோ, அம்னோ உதவித் தலைவர் தொடர்ந்து அமைதியாக இருக்க முடியாது என்றும், மேலும் அவரது அரசியல் நிலைப்பாட்டைக் கூறத் தொடங்க வேண்டும் என்றும் கூறினார்.
“இஸ்மாயில் சப்ரி உறுதியாக இருக்க வேண்டும். அவர் கட்சியின் உதவித் தலைவராக இருப்பதால் அவர் அமைதியாக இருக்க முடியாது, ” என்று முகமட் கிர் மலேசியாகினியிடம் கூறினார்.
15- வது பொதுத் தேர்தலில் பெர்சாத்துவுடனான உறவை அம்னோ முறித்துக் கொள்ள இருப்பது, ஏற்கனவே அம்னோ உச்சமன்றக் குழுவின் முடிவாக பெர்சாத்து தலைவர் பிரதமர் மொகிதின் யாசினுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
எவ்வாறாயினும், இந்த வார இறுதியில் அம்னோ பொதுக் கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அம்னோ ரலைவர் சாஹிட் ஹமிடியுடன் அன்வார் அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், அடுத்த பொதுத் தேர்தலில் பிகேஆருடனான எந்தவொரு ஒத்துழைப்பும் இல்லை என்று சாஹிட் திட்டவட்டமாகக் கூறினார்.