கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பிகேஆருடன் அம்னோ ஒத்துழைக்கக்கூடும் என்ற ஊகங்களை அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி திட்டவட்டமாக மறுத்தார்.
முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையிலான அம்னோவுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் இதுபோன்ற பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என்று சாஹிட் கூறினார்.
“ஆமாம், அன்வாரும் நானும் நாடாளுமன்றத்தில், திருமணங்களில் சந்திப்போம். ஆனால் எந்தவொரு பேச்சுவார்த்தையும் முறையாகவோ அல்லது முறையில்லாமலோ நடக்கவில்லை.என்னுடனும் இல்லை, மாட் ஹசானுடனும் இல்லை,” என்று அவர் டி ஸ்டாரிடம் கூறினார்.
ஒரு வாரத்திற்கு முன்னர், அன்வார் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பல பிகேஆர் தலைவர்களுக்கும் அம்னோவைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே ஆரம்ப பேச்சுவார்த்தைகள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இருப்பினும், சாஹிட், பிகேஆருடன் அத்தகைய பேச்சுவார்த்தையை நடத்த கட்சியின் எந்த தலைவருக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை என்று கூறினார்.
“அவர் யாருடன் கலந்துரையாடினார் என்று நீங்கள் அவரிடம் கேட்க வேண்டும். ஆனால், அம்னோ அத்தகைய பேச்சுவார்த்தை நடத்த எந்த பிரதிநிதிக்கும் அங்கீகாரம் வழங்கவில்லை,” என்று அவர் கூறினார்.