Home One Line P2 இலங்கைக்கு எதிரான வாக்களிப்பில் இந்தியா பங்கு கொள்ளவில்லை- வைகோ கண்டனம்!

இலங்கைக்கு எதிரான வாக்களிப்பில் இந்தியா பங்கு கொள்ளவில்லை- வைகோ கண்டனம்!

902
0
SHARE
Ad

சென்னை: ஐநாவில் இலங்கைக்கு எதிராக ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தில் இந்தியா பங்குக்கொள்ளாமல் வெளிநடப்புச் செய்துள்ளது.

இந்த நடவடிக்கையை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டித்துள்ளார்.

இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசு, ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடத்தியது போர்க் குற்றம் அல்ல, அப்பட்டமான இனப்படுகொலை என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

#TamilSchoolmychoice

“அனைத்துலக சமுதாயம் தன் கடமையில் தவறியது. எனினும், அண்மையில் பிரிட்டன், ஜெர்மனி, கனடா, வடக்கு மாசிடோனியா, மாண்டினிரோ, மலாவி ஆகிய ஆறு நாடுகள் இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா.வின் மனித உரிமை மன்றம் தீர்மானம் கொண்டுவந்தன. இந்திய அரசு, இலங்கையை ஆதரிக்கும் என்று இலங்கை வெளிவிவகாரத்துறைச் செயலாளர் ஜெயநாத் கொலம்பிகே நான்கு நாட்களுக்கு முன்பு கூறினார்.

“அதேபோல, இந்தியா வெளிநடப்புச் செய்ய்துள்ளது. இன்று தமிழ்நாட்டில் தேர்தல் நடப்பதால், ஏமாற்றுவதற்காக வெளிநடப்புச் செய்தார்கள். இல்லையேல், இலங்கைக்கு ஆதரவாகவே ஓட்டுப்போட்டு இருப்பார்கள்,” என்று அவர் கூறியுள்ளார்.