Home One Line P1 காவல் துறை தலைவரின் குற்றச்சாட்டுக்கு எம்ஏசிசி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

காவல் துறை தலைவரின் குற்றச்சாட்டுக்கு எம்ஏசிசி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

642
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) மலேசிய காவல் துறையில் தவறான அமைப்புகள் மற்றும் ஊழல் பிரச்சனை குறித்து அமைதியாக இருக்க வேண்டாம் என்று பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் தியோ கேட்டுக் கொண்டார்.

அப்துல் ஹாமிட்டின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது குறித்து அதன் தலைமை ஆணையர் அசாம் பாகி வெளிப்படையாகக் கூற வேண்டும் என்று அவர் கூறினார்.

“அப்துல் ஹாமிட் கூறியது போல் காவல் படையில் ஊழல் பழக்கவழக்கங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக எம்ஏசிசி என்ன செய்யும் என்பதை வெளிப்படையாகக் கூறும்படி நான் அசாமைக் கேட்டுக்கொள்கிறேன். இந்த குற்றச்சாட்டுகள் பற்றிய உண்மையை அறிய எம்ஏசிசி விசாரணை செய்ய விரும்பவில்லையா?,” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

#TamilSchoolmychoice

“இது சாதாரண காவல் துறை அதிகாரிகள் அல்ல. ஆனால், காவல் துறைத் தலைவரே, காவல் துறையில் ஊழல் நடைமுறைகள் இருப்பதாக பகிரங்கமாக அறிவிக்கிறார். எம்ஏசிசி பொதுத் மக்களிடத்தில் நம்பிக்கையை ஊக்குவிக்க வேண்டும். இந்த பிரச்சனையை அவர் எவ்வாறு கையாள்வார் என்பதை அசாம் விளக்க வேண்டும். அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்றால், அதற்கான காரணத்தையும் அவர் விளக்க வேண்டும், “என்று அவர் கூறினார்.