Home One Line P1 தைப்பூசத்தை முன்னிட்டு மலாக்காவில் அரசு ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கப்படும்

தைப்பூசத்தை முன்னிட்டு மலாக்காவில் அரசு ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கப்படும்

546
0
SHARE
Ad

மலாக்கா: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மலாக்காவில் இந்து அரசு ஊழியர்கள் வியாழக்கிழமை பதிவு செய்யப்படாத விடுப்பு எடுக்கலாம் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

அண்மையில், நடைபெற்ற மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் இந்த சிறப்பு விடுமுறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மலாக்கா முதல்வரின் சமூக விவகார செயலாளர் எம்.எஸ்.மகாதேவன் தெரிவித்தார்.

கெடாவில் இதற்கு முரணான முடிவு எடுக்கப்பட்டதை அடுத்து மலாக்காவில் இந்துக்களுக்கு சாதகமான முடிவு வழங்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“இந்து மதத்தைச் சேர்ந்த சுமார் 100 அரசு ஊழியர்களுக்கு ஊராட்சி அதிகாரிகளில் பணியாற்றுவோர் உட்பட பதிவு செய்யப்படாத விடுப்பு வழங்கப்படும். அன்றைய தினம் அவர்கள் மத விழாக்களை குறிப்பாக பிரார்த்தனைகளை செய்ய அனுமதிக்கிறார்கள்,” என்று பெர்னாமாவிடம் இன்று மகாதேவன் கூறினார்.

தைப்பூசத்திற்கு பொது விடுமுறையைக் கடைப்பிடிக்காத மாநிலங்களில் மலாக்காவும் அடங்கியுள்ளது. பகாங், திரெங்கானு, கிளந்தான், பெர்லிஸ், சபா, சரவாக் மற்றும் லாபுவானில் இவ்விழாவிற்கு விடுப்புகள் வழங்கப்படுவதில்லை.

இந்த ஆண்டைத் தவிர, கடந்த எட்டு ஆண்டுகளாக தைப்பூசத்திற்கு சிறப்பு விடுமுறை கெடாவில் வழங்கப்பட்டுள்ளது.

மலாக்காவில் தைப்பூசக் கொண்டாட்டத்திற்கு இரத ஊர்வலம் இருக்காது என்று மகாதேவன் கூறினார். ஆனால் இந்துக்கள் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைக்கு ஏற்ப கோயில்களில் சிறிய குழுக்களாக பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.