Home உலகம் இஸ்ரேல்: மத நிகழ்வில் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்

இஸ்ரேல்: மத நிகழ்வில் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்

575
0
SHARE
Ad

ஜெருசேலம்: இஸ்ரேலின் வடகிழக்கில் நெரிசலான மத விழாவில் ஏற்பட்ட மோதலில் சிக்கி குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆண்டுதோறும் மெரோன் மலையின் அடிவாரத்தில் நடைபெறும் லாக் பி’ஓமர் திருவிழாவில் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு இது ஒரு “பாரிய பேரழிவு” என்று வர்ணித்து, உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்வதாகவும் கூறினார்.

#TamilSchoolmychoice

பல்லாயிரக்கணக்கான யூதர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இது கொவிட்-19 தொற்றுக்குப் பிறகு இஸ்ரேலில் நடந்த மிகப்பெரிய நிகழ்வாகும்.

நாட்டின் வெற்றிகரமான தடுப்பூசி திட்டம் பல கட்டுப்பாடுகளை நீக்க அனுமதித்துள்ளது, ஆனால் இந்த நிகழ்வுக்கு முன்னர் கொவிட் -19 ஆபத்து குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.

ஆரம்பக் கட்ட விசாரணையில் அந்த இடத்தில் ஒரு கட்டமைப்பு இடிந்து விழுந்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், பின்பு நெரிசலில் மக்கள் விழுந்ததால் இது ஏறட்டதாகக் கூறப்படுகிறது. சில பங்கேற்பாளர்கள் படிகளில் கால் இடறி விழுத் தொடங்கியதும், இதனால் டஜன் கணக்கானவர்கள் விழுந்ததாகக் கூறப்படுகிறது.