Home நாடு 22 ரமலான் சந்தைகள் மூட உத்தரவு

22 ரமலான் சந்தைகள் மூட உத்தரவு

1012
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பல மாநிலங்களில் 22 ரமலான் சந்தைகள் கொவிட் -19 பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதால் நாளை முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளன.

மைசெஜாதெரா செயலி மூலம் சுகாதார அமைச்சினால் நடத்தப்பட்ட பகுப்பாய்வு மற்றும் தொடர்புத் தடயங்களைத் தொடர்ந்து வீட்டுவசதி மற்றும் ஊராட்சி அமைச்சகத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எப்எம்டி பார்வையிட்ட கடிதத்தில், வீட்டுவசதி மற்றும் ஊராட்சி அமைச்சின் தலைமைச்செயலாளர் சைனால் அபிடின் அபு ஹசான், இந்த சந்தைகள் கொவிட் -19 தொற்றின் புதிய பாதிப்பை ஏற்படுத்த அதிக ஆபத்து இருப்பதாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

மூடல் உத்தரவு சிலாங்கூர், கோலாலம்பூர், பினாங்கு, ஜோகூர், கெடா, பகாங் மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்டன.

நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை அமல்படுத்தியிருந்தாலும், கூடல் இடைவெளியை கடைப்பிடிப்பது கடினம் என்பதால் இந்த சந்தைகள் குறித்து பொதுமக்கள் முன்னர் கவலை தெரிவித்தனர்.