கோலாலம்பூர்: மூத்த காவல் துறை அதிகாரிகளின் நியமனம் குறித்து விவாதிக்கப்பட்ட குரல்பதிவு உண்மை என்று உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் இன்று ஒப்புக் கொண்டார்.
எவ்வாறாயினும், தாம் எந்த தவறும் செய்யவில்லை என்று ஹம்சா கூறினார்.
“இது எனது குரல். நான் எந்த தவறும் செய்யவில்லை. அதில் என்ன தவறு? எனது உரையாடலின் பதிவைத் திருடியவர் தவறு செய்தார்,” என்று அவர் கூறினார்.
அப்பதிவில் ஹம்சா, மற்றவருடன், “நம் பையன்” என்று அவர் குறிப்பிட்ட ஒரு நபருக்கு ஆதரவை வெளிப்படுத்தினார்.
“ஏனென்றால், அவர் நம் பையன், பேராக்கை சேர்ந்தவர்,” என்று அவர் கூறினார்.
தனக்குத் தெரிந்தவர்களைத் தேர்ந்தெடுப்பதாக சைனுடின் கூறினார்.
“நான் அவரிடம் சொன்னேன். உங்களுக்கு வேறு வழியில்லை, நீங்கள் பெயர்களை மட்டுமே கொடுக்க முடியும் ஐந்து பேர் என்றாலும், நீங்கள் எனக்குத் தெரியப்படுத்துங்கள், நாங்கள் முடிவு செய்வோம். முன்பு போலவே இனி நீங்கள் தீர்மானிக்க முடியாது. அனைத்து மாநில காவல் துறைத் தலைவர்களும், அவரால் முடிவு செய்ய முடியாது, ” என்றார்.