Home One Line P2 வாடிக்கையாளர்களுக்கு உற்சாகமூட்டும் உள்ளடக்கங்களுடன் அஸ்ட்ரோ பொங்கல் கொண்டாட்டம்

வாடிக்கையாளர்களுக்கு உற்சாகமூட்டும் உள்ளடக்கங்களுடன் அஸ்ட்ரோ பொங்கல் கொண்டாட்டம்

1142
0
SHARE
Ad

கோலாம்பூர் – அஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் 15 ஜனவரி 2020 முதல் பொங்கலை முன்னிட்டு இடம்பெறவிருக்கும் எண்ணிலடங்கா உள்ளூர் மற்றும் அனைத்துலக  உள்ளடக்கங்களை உள்ளடக்கிய சிறப்பு நிகழ்ச்சிகளை அஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் வானொலி வாயிலாக இரசித்து மகிழலாம்.

உள்ளூர் படைப்புகளான ‘ரசிக்க ருசிக்க’ பொங்கல் சிறப்பு, அடடா பொங்கல், பாட்டி மற்றும் டெனஸுடன் பொங்கல், மற்றும் ஹிட் திரைப்படமான, என்ஜிகே போன்ற அற்புதமான உள்ளடக்கங்களை விண்மீன் எச்டி-இல் (அலைவரிசை 231) கண்டு மகிழலாம்.

புகழ்பெற்ற உள்ளூர் பேச்சாளர் டாக்டர் காதர் இப்ராகிமின் (படம்) நம் வாழ்க்கை நம் கையில் எனும் ஊக்கமளிக்கும் பேச்சு நிகழ்வையும், உள்ளூர் கலைஞர்கள் கலந்து சிறப்பிக்கும் நையாண்டி பொங்கல் எனும் விளையாட்டு நிகழ்ச்சியையும் வாடிக்கையாளர்கள் அஸ்ட்ரோ வானவில்லில் (அலைவரிசை 201) கண்டு களிக்கலாம்.

#TamilSchoolmychoice

வாடிக்கையாளர்களை மேலும் குதூகலப்படுத்த பிளாக்பாஸ்டர் வெற்றித் திரைப்படங்களான பிகில், நம்ம வீட்டுப் பிள்ளை, சங்கத்தமிழன், விஸ்வாசம், மற்றும் பேட்ட ஆகியவை சன் தொலைக்காட்சியிலும் (அலைவரிசை 211/ எச்டி அலைவரிசை 234); அசுரன் மற்றும் கைதி திரைப்படங்களை விஜய்யிலும் (அலைவரிசை 224/ எச்டி அலைவரிசை 232) மற்றும் Astro Box Office, தங்கத்திரையில் (அலைவரிசை 241) அதிரடி-குற்றம்-த்ரில்லர் நிறைந்த காளிதாஸ் போன்ற திரைக்கு வந்து சில மாதங்களேயான சிறப்பு திரைப்படங்கள் இடம் பெறவுள்ளன.

ராகா வானொலி அலைவரிசையிலும் சிறப்பு நிகழ்ச்சிகள்

அதுமட்டுமின்றி, மலேசியாவின் முதல் தர தமிழ் வானொலியான ராகா, தனது ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தளிக்கும் வகையில் பல தரமான சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

கலக்கல் காலையின் போது, அந்த அங்க அறிவிப்பாளர்கள் சுரேஷ் (பொங்கல் புகழேந்தியாகவும்) மற்றும் அகிலா (பொங்கல் பூஞ்சோலையாகவும்) வேடம் கொண்டு பொங்கல் கொண்டாட்டங்களின் பரிணாமங்கள் குறித்து விவாதிப்பர்.
‘இன்னிக்கி என்ன கதை’ அங்கத்தில், அறிவிப்பாளர் ரேவதி நெல் சாகுபடி மற்றும் விவசாய உபகரணங்கள் போன்ற விவசாயத் தொழிலில் பீடு நடை போடும் இரண்டு வணிகர்களை நேர்காணல் செய்வார்.

மேல் விவரங்களுக்கு அஸ்ட்ரோவின் சமூக வலைத்தளங்களை வலம் வாருங்கள்: Facebook | Instagram