கோலாலம்பூர்: மலேசியாவின் கடப்பிதழ் உலகின் 13-வது சக்திவாய்ந்த கடப்பிதழாக திகழ்கிறது. 178 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை மலேசிய கடப்பிதழை வைத்திருப்போர் அனுபவிக்க முடியும்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2020-ஆம் ஆண்டுக்கான ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் அண்ட் குளோபல் மொபிலிட்டி அறிக்கையில், மலேசியாவின் தரவரிசை ஒரு படி குறைந்துவிட்டாலும், கடப்பிதழ் அதிகாரத்தை வைத்திருக்கும் முதல் நான்கு ஆசிய நாடுகளில் மலேசியா இடம்பிடித்துள்ளது.
ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் கொரியா ஆசிய அளவில் முறையே முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன.
ஜப்பான் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக முதலிடத்தைப் பெற்றுள்ளது. அதன் கடப்பிதழை வைத்திருப்பவர்கள் 191 நாடுகளுக்கு விசா விண்ணப்பிக்காமல் செல்லலாம்.
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய இரண்டும் எட்டாவது இடத்தில் உள்ளன.
சீனாவும் இந்தியாவும் முறையே 72 மற்றும் 84-வது இடங்களைப் பிடித்துள்ளன. சீனாவின் கடப்பிதழை வைத்திருப்பவர்கள் 71 நாடுகளுக்கு முன் விசா விண்ணப்பிக்காமல் அணுக முடியும், அதே நேரத்தில் இந்தியாவுக்கு 58 நாடுகளுக்கு மட்டுமே அணுகல் உள்ளது.