Home One Line P2 மேக்சிஸ், 140 மில்லியன் ரிங்கிட் வருமானவரி இலாகாவுக்குச் செலுத்த வேண்டும்

மேக்சிஸ், 140 மில்லியன் ரிங்கிட் வருமானவரி இலாகாவுக்குச் செலுத்த வேண்டும்

609
0
SHARE
Ad

கோலாலம்பூர் : தான் முழுமையாக உரிமை பெற்றிருக்கும் துணை நிறுவனமான மேக்சிஸ் புரோட்பேண்ட் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனம் கூடுதல் வருமானவரியாகவும், அபராதமாகவும் 140 மில்லியன் ரிங்கிட் செலுத்த வேண்டும் என வருமானவரி இலாகாவிடம் இருந்து அறிவிக்கையை (நோட்டீஸ்) பெற்றிருப்பதாக மேக்சிஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

2016, 2017 ஆகிய ஆண்டுகளுக்கான கணக்குகளின் அடிப்படையில் இந்த அறிவிக்கை அனுப்பப்பட்டதாக மலேசிய பங்குச் சந்தை ஆணையத்திற்கு அனுப்பியிருக்கும் அறிக்கையில் மேக்சிஸ் தெரிவித்தது.

இதுகுறித்து தாங்கள் சட்ட ஆலோசனையைப் பெற்றுள்ளதாகவும், இந்த வருமானவரி கோரிக்கைக்கு எதிராகத் தாங்கள் முரண்படுவதால் அதை எதிர்த்து நீதிமன்றம் செல்லப் போவதாகவும் மேக்சிஸ் மேலும் தனது அறிக்கையில் தெரிவித்தது.

#TamilSchoolmychoice

மேக்சிஸ் நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமாகச் செயல்பட்டு வருகின்றது. இதன் பெரும்பான்மை பங்குகளின் உரிமையை மலேசியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவரான ஏ.கே.ஆனந்தகிருஷ்ணன் கொண்டிருக்கிறார்.