Home வணிகம்/தொழில் நுட்பம் வேஸ் செயலிக்கு இணையாக கூகுள் மேப்ஸ்!

வேஸ் செயலிக்கு இணையாக கூகுள் மேப்ஸ்!

902
0
SHARE
Ad

கலிபோர்னியா: வேஸ் (Waze) செயலியில் உள்ளது போலவே தற்போது, கூகுள் மேப்ஸ்சில், வாகனத்தில் பயணிக்கும் போது விபத்து ஏற்படுத்தக்கூடிய இடமோ அல்லது வேகமாக செல்லக்கூடாத இடமோ இருக்குமெனில் அதை பதிவு செய்யும் வசதியை தனது வாடிக்கையாளர்களுக்கு கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது

வேஸ் செயலியில் இது போன்ற அமைப்பு கடந்த ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, அண்டுராய்டு கைபேசிகளில் இந்த அம்சங்களுடன் கூகுள் மேப்ஸ் மேம்படுத்தப்பட்ட நிலையில், விரைவில் ஐபோன்களிலும் இது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேஸ் செயலியில் உள்ளது போல, பயனர்கள் அறிவிப்புகளை செய்யலாம். இப்படி பலரும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள விபத்துக்களை குறிக்கும் போது  ஓட்டுனர் ஒரு குறிப்பிட்ட ஆபத்தான வழியில் செல்லாமல் பாதுகாப்பாக பயணத்தை தொடர முடியும்.

#TamilSchoolmychoice

ஆயினும், இந்த அறிவிப்புகள் அனைத்தும் ஒருவர் பயணத்தை துவங்கிய பின்னரே காண முடிகிறது. கூகுள் மேப்ஸில் விபத்து மற்றும் முக்கிய அபாயத்தை மட்டுமே அறிவிப்பு செய்ய முடிகின்ற நிலையில் மற்ற ஆபத்துகளை குறிப்பிட முடிவதில்லை.