Home One Line P1 வேஸ்: மலேசியாவில் வாகன ஓட்டுனர்களின் அதிகபட்ச வேகம் 80 விழுக்காடு குறைந்துள்ளது!

வேஸ்: மலேசியாவில் வாகன ஓட்டுனர்களின் அதிகபட்ச வேகம் 80 விழுக்காடு குறைந்துள்ளது!

488
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வழிகாட்டும் பயண வரைபட செயலியான வேஸ் (Waze), தற்போதைய ஓட்டுநர்களைப் பற்றிய சில நடவடிக்கைகளைப் பகிர்ந்துள்ளது.

கொவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்த பல நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் வாகன ஓட்டுநர்களின் இயல்பான பழக்கமும் பாதித்துள்ளது என்று வேஸ் சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

உலகளவில் பெரும்பாலான நாடுகள் வியத்தகு முறையில் வாகனம் ஓட்டுவதை நிறுத்திவிட்டன. உலகளாவிய பயனர்கள் பிப்ரவரி 11-25- க்கு இடையில், தினசரி சராசரியுடன் ஒப்பிடும்போது 60 விழுக்காடு குறைவான கிலோமீட்டர் ஓட்டியுள்ளனர்.

நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் வீழ்ச்சி மிகவும் தெளிவாகத் தெரிவதாக அது குறிப்பிட்டுள்ளது. வேஸ் பயனர்களின் பிப்ரவரி மாத தினசரி சராசரியுடன் ஒப்பிடும்போது 80 விழுக்காடு குறைவான கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டுகிறார்கள் என்று அது தெரிவித்துள்ளது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருக்கும் போது வேஸ் பயனர்களுக்கு உதவ, மருத்துவ சோதனை மையங்கள் மற்றும் அவசரகால உணவு விநியோக இடங்களுக்கான தனிமைப்படுத்தல் தொடர்பான சாலை மூடல்கள் மற்றும் வரைபட இலக்குகளைச் சேர்க்க தன்னார்வ வரைபட நிபுணர்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.