Home One Line P1 மீண்டும் செயல்படுவதற்காக 18,650 வணிக விண்ணப்பங்களை அமைச்சு பெற்றுள்ளது!

மீண்டும் செயல்படுவதற்காக 18,650 வணிக விண்ணப்பங்களை அமைச்சு பெற்றுள்ளது!

587
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது முக்கியமான ஒரு சில தொழில் துறைகள் மற்றும் சேவைகள் செயல்பட அனுமதிக்கப்படும் என அறிவித்ததை அடுத்து சுமார் 18,650 விண்ணப்பங்களை அனைத்துலக வாணிப  மற்றும் தொழில் துறை அமைச்சு பெற்றுள்ளதாக அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தெரிவித்தார்.

ஆயினும், இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடைமுறையில் இருக்கும் போது, செயல்பட அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களால் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார முன்னெச்சரிக்கைகள் பற்றிய வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு வழங்கி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

செயல்பட அனுமதிக்கப்படும் அனைத்து நிறுவனங்களில் முழுவதுமாக 50 விழுக்காடு பேர் மட்டுமே பணிபுரிய அனுமதிக்கப்படுகின்றனர் என்று இன்று வியாழக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறாக, நிறுவனங்களின் செயல்பாடுகளை படிப்படியாக திறப்பதன் மூலமாக நாட்டின் பொருளாதார திறனை அதிகரிக்க உதவும் என்று அமைச்சர் கூறினார்.