Home இந்தியா வாரணாசியில் மோடி மீண்டும் போட்டி – காந்தி நகரில் அமித் ஷா!

வாரணாசியில் மோடி மீண்டும் போட்டி – காந்தி நகரில் அமித் ஷா!

837
0
SHARE
Ad

புதுடில்லி – நடைபெறவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத் மாநிலத்தின் காந்தி நகர் மற்றும் வாரணாசியில் போட்டியிட்ட மோடி இந்த முறை வாரணாசியில் மட்டும் போட்டியிடுகிறார்.

குஜராத் மாநிலத்தின் காந்தி நகர் தொகுதியில் பாஜக தலைவர் அமித் ஷா போட்டியிடுகிறார்.

அமேதியில் ராகுல் …

#TamilSchoolmychoice

இதற்கிடையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக அமைச்சர் ஸ்மிருதி இராணி மீண்டும் களத்தில் இறங்குகிறார்.