Home இந்தியா இந்தியா-பாகிஸ்தான்: எல்லையில் அத்துமீறிய தாக்குதல் தொடர்கிறது!

இந்தியா-பாகிஸ்தான்: எல்லையில் அத்துமீறிய தாக்குதல் தொடர்கிறது!

916
0
SHARE
Ad

ஜம்மு காஷ்மீர்: கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதியான புல்வாமாவில் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பதற்ற நிலை அதிகரித்தது. அந்த கொடூரச் சம்பவத்தில் 44 துணை இராணுவத்தினர் உயிர் இழந்தனர்.

அதற்கு, பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியா 26-ஆம் தேதி பாலக்கோட்டில் விமானப்படைத் தாக்குதலை நடத்தியது. இந்த சம்பவத்திற்குப் பின்னர் பாகிஸ்தான் இராணுவத்தின் அத்துமீறல் அதிகரித்து உள்ளதாக இந்திய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

ஜனவரி மாதம் தொடங்கி பாகிஸ்தான் இராணுவத்தின் அத்துமீறலால், உயிர் இழந்த இந்திய வீரர்களின் எண்ணிக்கை 110-ஆக உயர்ந்துள்ளது என இந்திய இராணுவம் குறிப்பிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் குண்டுமழை பொழிந்ததில் இந்திய இராணுவத்தை சேர்ந்த யஷ் பால் என்ற வீரர் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறுவதால் இந்திய எல்லையில் உள்ள கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

முன்னதாக, மேலும் ஒரு தாக்குதல் இந்தியா மீது மேற்கொள்ளப்பட்டால் அதனால் ஏற்படும் போரின் விளைவுகளை யாராலும் சமாளிக்க முடியாது என அமெரிக்கா கடந்த புதன்கிழமை எச்சரித்திருந்தது.