Home வணிகம்/தொழில் நுட்பம் உலகின் தூய்மையான விமான சேவை எது தெரியுமா?

உலகின் தூய்மையான விமான சேவை எது தெரியுமா?

898
0
SHARE
Ad

இலண்டன் – ஸ்கைடிராக்ஸ் எனப்படும் அமைப்பு வழங்கியுள்ள 2018-ஆம் ஆண்டுக்கான அனைத்துலக அளவிலான விமான சேவை நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் உலகின் மிகத் தூய்மையான விமான சேவை நிறுவனமாக ஜப்பானின் ஆல் நிப்போன் ஏர்வேஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் 30 விமான நிறுவனங்களின் வரிசையில் ஆசியாவின் பல விமான நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.

தைவானின் இவா ஏர், தென் கொரியாவின் ஆசியானா ஏர்லைன்ஸ் ஆகியவற்றைப் பின்னுக்குத் தள்ளி, ஜப்பானின் நிப்போன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

#TamilSchoolmychoice

அமர்வதற்கான இருக்கைகள், மேசைகள், தரைவிரிப்புகள், பயணப் பெட்டிகள் வைக்கப்படும் இடங்கள், கழிவறைகள் போன்ற அம்சங்களில் மிகத் தூய்மையான விமான சேவை எது என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட தேர்வில், முதல் 10 இடங்களில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஜப்பான் ஏர்லைன்ஸ், கத்தே பசிபிக், கத்தார் ஏர்வேஸ், சுவிஸ் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ், ஹாய்னான் ஏர்லைன்ஸ் மற்றும் லுப்தான்சா ஆகிய விமான நிறுவனங்கள் இடம் பிடித்தன.