Home உலகம் பிரிட்டன் பிரதமர் மாற்றப்படுகிறாரா?

பிரிட்டன் பிரதமர் மாற்றப்படுகிறாரா?

846
0
SHARE
Ad

இலண்டன் – ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் விவகாரத்தில் தொடர்ந்து பின்னடைவுகளைச் சந்தித்து வரும் நடப்பு பிரதமர் தெரெசா மேயை மாற்றிவிட்டு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க பிரிட்டனின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் தெரெசா மேயின் நெருக்கமானவர்கள் என்றும் அவருக்குப் பதிலாக அடுத்த பிரதமர்களாக வருவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படும் இரண்டு அமைச்சர்கள் தெரெசாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

டேவிட் லிடிங்டன் மற்றும் மைக்கல் கோவ் ஆகிய இருவருமே அந்த அமைச்சர்களாவர்.

#TamilSchoolmychoice

தெரெசா மே தலைமைத்துவத்திற்குப் பதிலாக இலண்டனின் முன்னாள் மாநகரசபைத் தலைவர் (மேயர்) போரிஸ் ஜோன்சன் பிரிட்டனின் பிரதமராகத்  தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற ஆரூடங்கள் பரவி வருகின்றன.

எனினும், கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ள தெரசா மே தலைமைத்துவத்திற்கு ஆதரவு வழங்கப்பட வேண்டும் எனவும் பிரதமரை மாற்றுவதற்கு இது சரியான தருணமல்ல என்றும் மேற்குறிப்பிட்ட இரண்டு அமைச்சர்களும் கருத்து தெரிவித்தனர்.