Home இந்தியா இந்திய பாதுகாப்புப் படை 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது!

இந்திய பாதுகாப்புப் படை 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது!

1524
0
SHARE
Ad

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையிலான மோதலில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஐஏஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை காலையில், சிஆர்பிஎப், இராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் இணைந்து நடத்திய ரோந்து பணிகளின் போது, தீவிரவாதிகள் இவர்களை நோக்கி சுட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளங்கள் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. சம்பவ இடத்திலிருந்து ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன எனக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

கடந்த மாதம் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாபாகிஸ்தான் எல்லையில் இந்திய இராணுவம் கூடுதல் ரோந்துகளையும், பாதுகாப்பு பணிகளையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.