கோலாலம்பூர் – தனக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் 1எம்டிபி தொடர்பான கள்ளப் பணப் பரிமாற்ற வழக்கை நேரலையாக ஒளிபரப்ப எழுந்து வரும் அறைகூவல்களுக்கு முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் ஆதரவு தெரிவித்துள்ளார்.
1எம்டிபி தொடர்புடைய எஸ்.ஆர்.சி இண்டர்நேஷனல் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தில் நஜில் ஊழல் புரிந்ததாகக் கொண்டு வரப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை எதிர்வரும் புதன்கிழமை ஏப்ரல் 3-ஆம் தேதி தொடங்குகிறது.
வழக்கை மேலும் தாமதப்படுத்தாமல் ஏப்ரல் 3-ஆம் தேதி
“வழக்கை நேரலையாக ஒளிபரப்புவதால், தெளிவான, வெளிப்படைத் தன்மையை வெளிப்படுத்துவதோடு, சட்டதிட்டங்கள் முறையாக பின்பற்றப்படுவதையும் இந்தப் புதிய நடைமுறை உறுதிப்படுத்தும்” என நஜிப் கூறியிருக்கிறார்.
எஸ்.ஆர்.சி. இண்ட்ர்நேஷனல் தொடர்பில் நஜிப் 10 நீதிமன்றக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.