Home உலகம் சிலோவாக்கியாவின் முதல் பெண் அதிபர் ஜூசானா!

சிலோவாக்கியாவின் முதல் பெண் அதிபர் ஜூசானா!

727
0
SHARE
Ad

சிலோவாக்கியா: 45 வயது நிரம்பிய ஜூசானா காபுட்டோவா எனும் பெண் சிலோவாக்கியாவின் முதல் பெண் அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு அரசியல் அனுபவமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்நிறுத்தி பிரசாரம் செய்த ஜுசானா, தன்னை எதிர்த்து நாட்டின் ஆளும் கட்சி முன்நிறுத்திய வேட்பாளரான மார்ஸ் செபோகோவிக்கை வீழ்த்தி புதிய வரலாற்றை படைத்துள்ளார்.

கடந்த ஆண்டு சிலோவாக்கியாவில் புலனாய்வு பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், அதிபர் தேர்தலில் தாம் போட்டியிடுவது தொடர்பாக முடிவெடுத்ததற்கு குசியாக் எனும் அந்த பத்திரிக்கையாளரின் மரணமும் ஒரு முக்கிய காரணம் என்று ஜுசானா தெரிவித்துள்ளார். ஜுசானா சமார் 58 விழுக்காடு வாக்குகளுடன் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்துள்ளார்.