Home நாடு “ஆர்டிஎம் தொடர்ந்து செயல்பட வேண்டும்”- கோபிந்த் சிங்

“ஆர்டிஎம் தொடர்ந்து செயல்பட வேண்டும்”- கோபிந்த் சிங்

761
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசிய வானொலி தொலைக்காட்சி நிறுவனத்தை (ஆர்டிஎம்) முன்னோக்கி நகர்த்துவதற்கும், எப்போதும் மலேசிய மக்களின் முதல் தரத் தேர்வாக இந்நிறுவனத்தை நிலைத்திருக்க வைப்பதற்கும்  தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ உறுதி அளித்துள்ளார்.

புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் போட்டி தன்மைகளை மேலும் மேம்படுத்துவதற்கு அமைச்சு தொடர்ந்து உதவி செய்யும் என ஆர்டிஎம்மின் 73-வது நிறைவு விழாவில் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்நிறுவனத்தை இனி தொடர தேவையில்லை என பலர் தம்மை அணுகியதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆயினும், அவர்களின் கருத்துகளுக்கு இணங்க தாம் முன்வரவில்லை என அவர் குறிப்பிட்டதாகக் கூறினார். மேம்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகளுடன் மேலும் இந்நிறுவனத்தை மிளிர வைக்க அமைச்சு விரைவில் திட்டங்களை வரையும் என அவர் தெரிவித்தார்.