Home இந்தியா பிஎஸ்எல்வி 45 ஏவுகலன் விண்ணில் பாய்ச்சப்பட்டது, இந்தியா சாதனை!

பிஎஸ்எல்வி 45 ஏவுகலன் விண்ணில் பாய்ச்சப்பட்டது, இந்தியா சாதனை!

759
0
SHARE
Ad
படம்: நன்றி இஸ்ரோ

ஶ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு நிலையத்திலிருந்து, இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-45 ஏவுகலன், ஏராளமான செயற்கைக் கோள்களுடன் இன்று திங்கட்கிழமை, உள்நாட்டு நேரம்படி காலை 9.27 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் இந்தியாவின்எமிசாட்என்ற நவீன மின்னணு செயற்கைக் கோள் அனுப்பப்பட்டுள்ளது.  

இந்திய இராணுவத்தின் உளவுப்பணி பயன்பாட்டிற்காக இந்த ஏவுகலன் செலுத்தப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

இதனுடன் அமெரிக்கா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, லித்துனியா ஆகிய வெளிநாடுகளைச் சேர்ந்த 28 செயற்கைக் கோள்களும் அனுப்பப்பட்டுள்ளன. வெற்றிகரமான இந்த பாய்ச்சலுக்கு மக்களும் நாட்டுத் தலைவர்களும் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.