Home நாடு 42 மில்லியன் ரிங்கிட் பண மோசடி வழக்கில் நஜிப் குற்றவாளி என நிரூபிக்க முடியும்!- டோமி

42 மில்லியன் ரிங்கிட் பண மோசடி வழக்கில் நஜிப் குற்றவாளி என நிரூபிக்க முடியும்!- டோமி

1210
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீதான 42 மில்லியன் ரிங்கிட் வழக்கு விசாரணை இன்று புதன்கிழமை தொடங்கியது. பிற்பகல் 2.07 மணியளவில் நீதிமன்ற வளாகத்தை வந்தடைந்த நஜிப்புக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் கூடியிருந்தனர்.

66 வயதுடைய நஜிப்எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிறுவனத்துக்குச் சொந்தமான 42 மில்லியன் ரிங்கிட் விவகாரம் சம்பந்தமான மூன்று குற்றச் செயல்களுக்காக இந்த வழக்கு விசாரணையை எதிர் நோக்கினார். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது, நம்பிக்கை மீறல் மற்றும் பண மோசடிக் காரணமாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மீண்டும் இந்த வழக்கினை ஒத்தி வைக்க நஜிப் தரப்பு வழக்கறிஞர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆயினும், வழக்கினை இனியும் ஒத்திவைக்க இயலாது எனக் கூறி நீதிபதி விசாரணையைத் தொடக்கினார்.

35 ஆண்டுக் கால நிறுவன துணை பதிவாளராக (எஸ்எஸ்எம்) பணி புரியும் முகமட் அக்மாலுடின் அப்துல்லா முதல் சாட்சியாக முன் நிறுத்தப்பட்டார். இதனிடையே, தனது பிரதமர் பதவியை வைத்து, டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் 42 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெற்றதாக வழக்கின் தொடக்க அறிக்கையில் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் கூறினார்.

#TamilSchoolmychoice

மலேசிய அரசாங்கத்தின் ஓய்வூதிய நிதியிலிருந்து எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிறுவனத்திற்கு 4 பில்லியன் ரிங்கிட்டைப் பெற்று தந்ததற்கு நஜிப்பிற்கு நேரடியாக தொடர்பிருப்பதை நிரூபிக்க இயலும் என டோமி குறிப்பிட்டார். மேலும், ஹொனலுலுவில் உள்ள உயர்தர அழகு சாதன விற்பனை மையத்தில், அவரது கடன் பற்று அட்டையை பயன்படுத்தி, 130,625 அமெரிக்கா டாலருக்கு பொருட்கள் வாங்கியதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.   

இந்த வழக்கு விசாரணை வருகிற ஏப்ரல் 15-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.