Home உலகம் 30 ஆண்டுகள் அதிகாரத்திலிருந்த சூடான் அதிபர் கைது!

30 ஆண்டுகள் அதிகாரத்திலிருந்த சூடான் அதிபர் கைது!

808
0
SHARE
Ad

சூடான்: முப்பது ஆண்டுகளாக சூடானின் அதிபராக இருந்த ஒமர் அல் பஷீர் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர், அவாத் இப்ன் ஊப் தெரிவித்தார். இதனால், நாட்டில் மூன்று மாதங்களுக்கு அவசர நிலை செயல்பாட்டில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கூறிய அவாத், இராணுவத்தின் மேற்பார்வையில் இரண்டு ஆண்டு காலம் நாட்டின் ஆட்சி இருக்குமென்றும், இதனை தொடர்ந்து தேர்தல்களைத் நடத்த முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

1989-லிருந்து ஆட்சி செய்து வரும் அதிபர் பஷீருக்கு எதிராக பல மாதங்களாக தொடர் போராட்டம் நடந்து வந்த நிலையில், அவரது ஆட்சியின் போது நாட்டில் மோசமான மேலாண்மை, ஊழல், நீதியின்மை தலைத்தூக்கியிருந்ததை சுட்டிக் காட்டினார்.  தற்போது, பஷீர் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பஷீருக்கு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஏற்கனவே அனைத்துலக பிடி ஆணையை வழங்கியிருக்கிறது. போர் குற்றங்களில் ஈடுபட்டது மற்றும் சூடானின் மேற்கு டர்பார் பகுதியில் மனிநேயமற்ற குற்றங்களை நிகழ்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இருப்பினும், பஷீரின் கைதுக்கு பிறகு அந்நாட்டில் என்ன நடக்கும் என்பது இன்னமும் தெளிவாக தெரியவில்லை.