Home உலகம் விக்கி லீக்ஸ்: ஜூலியன் அசாஞ்சே இலண்டனில் கைது!

விக்கி லீக்ஸ்: ஜூலியன் அசாஞ்சே இலண்டனில் கைது!

808
0
SHARE
Ad

பிரிட்டன்: கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு மீண்டும் விடுவிக்கப்பட்ட, அசாஞ்சே, தற்போது மீண்டும் பிரிட்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என ஏபிசி செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.

அமெரிக்காவின் ஆப்கானித்தான், ஈராக் போர்கள் குறித்த ஏராளமான இரகசிய ஆவணங்களைத் தன் இணையத்தளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியவர். இதன் மூலம் உலகளவில் கவனிக்கப்பட்ட அசாஞ்சே பல நாட்டு அரசுகளின் கண்டனங்களுக்கு ஆளானார்.

ஆனால், அசாஞ்சேவுக்கு உலகளவில் மனித உரிமை ஆர்வலர்களின் பெரும் ஆதரவு கிடைத்தது. நவம்பர் 2010-ஆம் ஆண்டு ஸ்வீடன் நீதிமன்றம், இவரை பாலியல் குற்றவாளியாக அறிவித்தது. தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த அசாஞ்சே, தான் வெளியிட்ட ஆவணங்களால் பாதிக்கப்பட்டவர்களின் பொய் குற்றச்சாட்டு இதுவெனக் கூறினார்

#TamilSchoolmychoice

அவரை கைது செய்ய அமெரிக்கா முயற்சித்த நிலையில், இலண்டனில் உள்ள ஈகுவேடார் தூதரம் அவருக்கு பாதுகாப்பு அளிக்க முன்வந்தது. இதனால் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் ஈகுவேடார் தூதரகத்தில் தஞ்சம் புகுந்திருந்தார்கடந்த 2018-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மீண்டும் விடுவிக்கப்பட்டார். ஆயினும், தற்போது அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.