Home நாடு ரந்தாவ்: 20,793 வாக்காளர்கள் தங்களின் பிரதிநிதியை தேர்வு செய்ய உள்ளார்கள்!

ரந்தாவ்: 20,793 வாக்காளர்கள் தங்களின் பிரதிநிதியை தேர்வு செய்ய உள்ளார்கள்!

991
0
SHARE
Ad

ரந்தாவ்: பதினான்கு நாட்கள் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பிறகு நாளை சனிக்கிழமை ரந்தாவ் வாழ் வாக்காளர்கள் தங்களின் பிரதிநிதியைத் தேர்தெடுக்க உள்ளனர்.

நாளை நடக்க இருக்கும் ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் போட்டியிடஅவரை எதிர்த்து நம்பிக்கைக் கூட்டணி சார்பில் பிகேஆர் கட்சியின் டாக்டர் எஸ்.ஸ்ரீராம் களமிறங்குகிறார்இவர்களைத் தவிர ஆர்.மலர் என்ற இந்தியப் பெண்மணியும்முகமட் நோர் ஹசான் என்பவரும் சுயேச்சையாகப் போட்டியிடுகின்றனர்.

காலை 8.00 மணி தொடங்கி 14 வாக்குப் பதிவு மையங்கள் மாலை 5.30 வரை திறக்கப்பட்டிருக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சுமார் 20,793 வாக்காளர்கள் நாளை தங்களது வாக்குகளை செலுத்துவார்கள் என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டது. நாளை தேர்தல் நடைபெறும் போது, சுமார் 515 தேர்தல் ஆணைய அதிகாரிகள் பொறுப்பில் இருப்பர் எனவும் அது தெரிவித்தது.