ஜகார்த்தா: இந்தோனேசியா சுலாவேசியின் தெற்குப் பகுதியில் மீண்டும் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக அமெரிக்க புவியியல் சேவை மையம் குறிப்பிட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை இந்தோனிசிய புவி இயற்பியல் நிறுவனமும் உறுதி செய்துள்ளது. உள்நாட்டு நேரம்படி இரவு 7.40 மணியளவில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட இடத்தை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே மாதிரியான நிலநடுக்கம் காரணமாக 2,000 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு இந்தோனிசிய புவி இயற்பியல் நிறுவனம் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டதோடு, மத்திய சுலவேசியில் உள்ள மக்களை வெளியேற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்பதால் சுனாமி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த சம்பவத்தின் போது ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த உடனடி செய்திகள் ஏதும் வெளியிடப்படவில்லை.